(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம் - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 16 June 2021

(Gஙாஇப்) மறைவான ஜனாஸா தொழுகை தொடர்பான மார்க்க விளக்கம்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று அதன்மீது தொழுகை நடாத்துவதாகும். அந்தத் தொழுகையின் நோக்கம் மரணித்தவருக்கு துஆ செய்வதாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم قال: «مَا مِنْ مَيِّتٍ يُصَلِّى عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفِّعُوا فِيهِ. (صحيح مسلم : 947)

 

மரணித்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை என நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு  அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.     (ஸஹீஹு  முஸ்லிம் : 947)

 

عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ بِقُدَيْدٍ - أَوْ بِعُسْفَانَ - فَقَالَ: يَا كُرَيْبُ، انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ، قَالَ: فَخَرَجْتُ، فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَهُ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: تَقُولُ هُمْ أَرْبَعُونَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَخْرِجُوهُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا، لَا يُشْرِكُونَ بِاللهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيهِ»، (صحيح مسلم : 948)

 

இப்னு அப்பாஸ் றழியல்லாஹு  அன்ஹு மா அவர்களின் அடிமையான குறைப் பின் (அபீமுஸ்லிம்) ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் றழியல்லாஹு  அன்ஹு மா அவர்களுடைய புதல்வர் ஒருவர் "குதைத்" அல்லது "உஸ்ஃபான்" எனுமிடத்தில் மரணித்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் றழியல்லாஹு  அன்ஹு மா அவர்கள், "குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பாருங்கள்" என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு  அன்ஹு மா அவர்களிடம் வந்து விடயத்தைச் சொன்னபோது "அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்லுங்கள்" என்றார்கள். நான் "ஆம்" என்றேன். "அதை (ஜனாஸாவை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்" என்று கூறிவிட்டு, "ஒரு முஸ்லிம் மரணித்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹு  அன்ஹு மா அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹு  முஸ்லிம் : 948)

 

ويُسَنُّ) حَيْثُ كانُوا سِتَّةً فَأكْثَرَ (جَعْلُ صُفُوفِهِمْ ثَلاثَةً فَأكْثَرَ) لِلْخَبَرِ الصَّحِيحِ «مَن صَلّى عَلَيْهِ ثَلاثَةُ صُفُوفٍ فَقَدْ أوْجَبَ أيْ غُفِرَ لَهُ» كَما فِي رِوايَةٍ والمَقْصُودُ مَنعُ النَّقْصِ عَنْ الثَّلاثَةِ لا الزِّيادَةِ عَلَيْها ومِن ثَمَّ قالَ فَأكْثَرَ وفِي مُسْلِمٍ «ما مِن مُسْلِمٍ يُصَلِّي عَلَيْهِ أمَةٌ مِن المُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إلّا شُفِّعُوا فِيهِ» وفِيهِ أيْضًا مِثْلُ ذَلِكَ فِي الأرْبَعِينَ(تحفة المحتاج - فَصْلٌ فِي الدَّفْنِ وَمَا يَتْبَعُهُ)

 

மையித்தை கிப்லாவின் திசையில் வைத்து நேரடியாக அதன்மீது தொழுகை நடாத்துவதே ஜனாஸாத் தொழுகையின் பொதுவான முறையாகும்.

அந்த முறைக்கு மாற்றமாக வெளியூரில் மரணித்த ஒருவருக்காக நடாத்தப்படும் தொழுகைக்கு (பGஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகை என்று சொல்லப்படும். இந்த மறைவான ஜனாஸாத் தொழுகை விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

 

ஷாபிஈ மத்ஹப் உட்பட பெரும்பான்மையான அறிஞர்கள் மறைவான ஜனாஸாத் தொழுகை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது என குறிப்பிடுகின்றனர்.

 

(وَيُصَلَّى عَلَى الْغَائِبِ عَنْ الْبَلَدِ) وَإِنْ قَرُبَتْ الْمَسَافَةُ وَلَمْ يَكُنْ فِي جِهَةِ الْقِبْلَةِ خِلَافًا لِأَبِي حَنِيفَةَ وَمَالِكٍ؛ لِأَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «أَخْبَرَ النَّاسَ وَهُوَ بِالْمَدِينَةِ بِمَوْتِ النَّجَاشِيِّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ وَهُوَ بِالْحَبَشَةِ» . رَوَاهُ الشَّيْخَانِ. (مغني المحتاج - فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَيَّ الْمَيِّت)

 

(وَيُصَلَّى عَلَى الْغَائِبِ عَنْ الْبَلَدِ) بِأَنْ يَكُونَ بِمَحَلٍّ بَعِيدٍ عَنْ الْبَلَدِ بِحَيْثُ لَا يُنْسَبُ إلَيْهَا عُرْفًا أَخْذًا مِنْ قَوْلِ الزَّرْكَشِيّ عَنْ صَاحِبِ الْوَافِي وَأَقَرَّهُ أَنَّ خَارِجَ السُّورِ الْقَرِيبَ مِنْهُ كَدَاخِلِهِ وَيُؤْخَذُ مِنْ كَلَامِ الْإِسْنَوِيِّ ضَبْطُ الْقُرْبِ هُنَا بِمَا يَجِبُ الطَّلَبُ مِنْهُ فِي التَّيَمُّمِ وَهُوَ مُتَّجَهٌ إنْ أُرِيدَ بِهِ حَدُّ الْغَوْثِ لَا الْقُرْبِ وَلَا يُشْتَرَطُ كَوْنُهُ فِي جِهَةِ الْقِبْلَةِ وَذَلِكَ لِأَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «أَخْبَرَ بِمَوْتِ النَّجَاشِيِّ يَوْمَ مَوْتِهِ وَصَلَّى عَلَيْهِ هُوَ وَأَصْحَابُهُ» رَوَاهُ الشَّيْخَانِ وَكَانَ ذَلِكَ سَنَةَ تِسْعٍ وَجَاءَ «أَنَّ سَرِيرَهُ رُفِعَ لَهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حَتَّى شَاهَدَهُ» وَهَذَا بِفَرْضِ صِحَّتِهِ لَا يَنْفِي الِاسْتِدْلَالَ لِأَنَّهَا - وَإِنْ كَانَتْ صَلَاةَ حَاضِرٍ بِالنِّسْبَةِ لَهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - هِيَ صَلَاةُ غَائِبٍ بِالنِّسْبَةِ لِأَصْحَابِهِ. (تحفة المحتاج - فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَيَّ الْمَيِّت)

 

الْمُتَّجَهُ أَنَّ الْمُعْتَبَرَ الْمَشَقَّةُ وَعَدَمُهَا فَحَيْثُ شَقَّ الْحُضُورُ وَلَوْ فِي الْبَلَدِ لِكُبْرِهَا وَنَحْوِهِ صَحَّتْ وَحَيْثُ لَا وَلَوْ خَارِجَ السُّورِ لَمْ تَصِحَّ (حاشية الشرواني)

 

(وَيُصَلِّي إمَامٌ) أَعْظَمُ (وَغَيْرُهُ عَلَى غَائِبٍ عَنْ الْبَلَدِ، وَلَوْ كَانَ دُونَ مَسَافَةِ قَصْرٍ، أَوْ) كَانَ (فِي غَيْرِ جِهَةِ الْقِبْلَةِ) أَيْ: قِبْلَةِ الْمُصَلِّي (بِالنِّيَّةِ إلَى شَهْرٍ) كَالصَّلَاةِ عَلَى الْقَبْرِ، لَكِنْ يَكُونُ الشَّهْرُ هُنَا مِنْ مَوْتِهِ، كَمَا فِي شَرْحِ الْمُنْتَهَى لِأَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَصَفَّ - أَيْ: النَّاسَ - وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا " (كشاف القناع عن متن الإقناع -فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ)

 

இதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ فِي اليَوْمِ الَّذِي مَاتَ فِيهِ خَرَجَ إِلَى المُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا.  (صحيح البخاري : 1245)

 

நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள், நஜாஷி மன்னர் அவர்கள் மரணித்த நாளிலேயே அவர் மரணித்ததைப் பற்றி (மக்களுக்கு) தெரிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழும் இடத்தை நோக்கிச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றனர். நபியவர்கள் நான்கு தக்பீர் கூறி தொழுகையை நடாத்தினார்கள் என அபூ ஹு ரைரா றழியல்லாஹு  அன்ஹு  அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 1245)

 

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் வேறு சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்து அவ்வாறான தொழுகை ஒன்று இல்லை என்று கூறுகின்றனர்.

 

(Gஙாஇப்) ஜனாஸா தொழமுடியும் என்ற ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில், வெளியூரில் மரணித்த ஒருவருக்காகவோ அல்லது ஊரில் மரணித்திருந்திருந்தாலும் நோய் அல்லது முடக்கம் போன்ற நிர்ப்பந்தமான காரணங்களினாலோ அந்த ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள், அதற்காக மறைவான ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

 

அந்தவகையில், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மரணித்தவரது ஜனாஸாவுக்குரிய தொழுகையை சுகாதார வழிமுறைகளைப் பேணி, குறிப்பிட்ட சிலருக்கே ஒன்று சேர்ந்து ஜனாஸாத் தொழுகை நாடாத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறே ஊர்கள் முடக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் வேறு காரணங்களினால் மரணித்தவர்களின் ஜனாஸாத் தொழுகைகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

 

எனவே, இவ்வாறான ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு முடியாத நிர்ப்பந்த நிலையில் உள்ளவர்கள் மறைவான ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

 

பொதுவாக ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரு ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியாமல் போகும் போது, அந்த ஜனாஸா பிறரால் தொழுவித்து அடக்கம் செய்யப்பட்ட போதிலும், அந்த ஜனாஸாவுடைய கப்ருக்கு அருகில் ஜனாஸாத் தொழுகையை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

 

(وَإِذَا صُلِّيَ عَلَيْهِ) أَيْ الْمَيِّتِ (فَحَضَرَ مَنْ) أَيْ شَخْصٌ (لَمْ يُصَلِّ) عَلَيْهِ (صَلَّى) عَلَيْهِ نَدْبًا (مغني المحتاج - فَصْلٌ فِي دَفْنِ الْمَيِّتِ وَمَا يَتَعَلَّقُ بِهِ)

 

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ امْرَأَةً - أَوْ رَجُلًا - كَانَتْ تَقُمُّ المَسْجِدَ - وَلاَ أُرَاهُ إِلَّا امْرَأَةً - فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهَا. (صحيح البخاري:  460)

 

மஸ்ஜிதை சுத்தம் செய்யக்கூடிய பெண்மனி (அல்லது ஒரு ஆண்) மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின்பு, நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணுடைய கப்ருக்கு அருகாமையில் தொழுதார்கள் என அபூ ஹுரைரா றழியல்லாஹு  அன்ஹு  அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 460)

அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஊர்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியவில்லையோ, அவர்களுக்காக மேற்கூறப்பட்ட அடிப்படையில் மறைவான ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்ள முடியும், அல்லது முடக்கம் நீக்கப்பட்டதன் பின்னர் அந்தக் கப்ருக்கு அருகாமையில் ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

அல்லாஹு தஆலா இத்தகைய நோயினால் மரணிப்பவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அருள்வானாக, அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுத்தருள்வானாக.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்                    

செயலாளர், பத்வாக் குழு                                    

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

 

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர்- பத்வாக் குழு  

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்                 

பொதுச் செயலாளர்,                                       

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா       

 

  

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,  

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here