பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை. - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 1 May 2021

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை.

Colombo (News 1st) பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நோன்பு பெருநாள், வெசாக் பண்டிகை என்பவற்றை வீட்டிலேயே கொண்டாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார்.

COVID நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், மத வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.

மக்கள் தமக்குரிய வழிபாட்டுத் தலங்களுக்கு குழுக்களாக செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here