கொவிட் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளுடன் வேறு நோயாளர்கள் : நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 31 May 2021

கொவிட் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளுடன் வேறு நோயாளர்கள் : நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கொவிட் தொற்று அறிகுறியை ஒத்த அறிகுறிகளைக் கொண்டு ஏனைய நோயாளர்களும் காணப்படுவதால் தொற்றினை கண்டறியக் கூடிய பரிசோதனைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாந்த் கொலம்பகே தெரிவித்தார்.

ஒரே அறிகுறிகளுடன் இரு வேறுபட்ட நோயாளர்கள் காணப்படுகின்றனர். எனவே பரிசோதனைகளின் பின்னரே இவர்களை வேறுபடுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலையால் டெங்கு உள்ளிட்ட ஏனைய வைரஸ் நோய் பரவக் கூடிய அபாயமும் காணப்படுகிறது. இது தொடர்பிலும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வைத்தியர் பிரசாந்த் கொலம்பகே சுட்டிக்காட்டினார்.

இதே வேளை கடந்த 3 நாட்களாக 30 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று ஞாயிறுக்கிழமை 2849 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83 442 ஆகும்.

இவர்களில் 85 623 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் உருவான கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here