சோதனைகள் நீங்க குனூத்துன்னாஸிலாவை ஓதிவருவோம் - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 24 May 2021

சோதனைகள் நீங்க குனூத்துன்னாஸிலாவை ஓதிவருவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

சோதனைகளின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைகளில் குனூத்துன்னாஸிலா ஓதிவந்துள்ளார்கள்.


துஆ என்பது ஒரு வணக்கம் என்பதுடன், கஷ்ட நஷ்டங்களை அல்லாஹு தஆலாவிடம் முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆயுதமுமாகும்.


அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:
'என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள்ளூ நான் உங்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன்.' (சூரா அல் ஙாபிர் : 60)


'எனது அடியான் என்னை அழைப்பானாயின், நிச்சயமாக நான் அவனுக்கு மிக சமீபத்தில் இருக்கிறேன். அழைப்போரின் அழைப்புக்கு பதில் சொல்பவனாகவும் இருக்கிறேன்.' (சூரா அல் பகரா: 186)


இதனை அடிப்படையாக வைத்து நாமும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற துஆக்களையும், குனூத்துன்னாஸிலாவையும் ஒதிவந்தோம். தற்போது உலகெங்கும் கொரோனாவின் அச்சுறுத்தல் மட்டுமல்லாது, மக்கள் பல பிரச்சினைகளை முகம் கொடுத்துக் கொண்டும் அநியாயம் இழைக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.


ஆகவே, கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமலாகி நாட்டில் சுபீட்சம் ஏற்படவும், அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீதம் கிடைக்கவும், ஐவேளைத் தொழுகைகளில் குனூத்துன்னாஸிலாவை சுருக்கமாகவும், நம்பிக்கையுடனும், ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.
குனூத்துன்னாஸிலாவை ஓதும் போது பின்வரும் துஆக்களை ஓதுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.


اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فإِنَّكَ تَقْضِي وَلا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (سنن أبي داود)


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ (سنن أبي داود)


اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ (صحيح البخاري)


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ (صحيح مسلم)


اَللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ وَالْمُسْلِمِيْنَ واجْعَلْهُمْ آمِنِينَ مُطمَئِنِّينَ فِي كُلِّ مَكَانٍ يَارَبَّ الْعَالَمِيْنَ


وَاحْفَظْهُمْ وَاحْفَظْ حُقُوقَهُمْ وَنِسَاءَهُمْ وَاطْفَالَهُمْ وَبُيُوتَهُمْ وَمَسَاجِدَهُمْ يَارَبَّ الْعَالَمِيْنَ

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here