இன்றைய வானிலை - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 13 November 2021

இன்றைய வானிலை


மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டிற்கு மேலாக மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் பலத்த காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*கடல் பிராந்தியங்களில்*
*************************
அந்தமான் கடல் பரப்பின் தென் பகுதியிற்கு மேலாகவும் அதனைச் சூழ உள்ள கடல் பகுதியுடனும் இணைந்து தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

ஆனபடியினால் இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியத்தின் ஆழமான பிரதேசங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல்
பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பானநிலையில் காணப்படும்.


*கலாநிதி
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி*.

#UKMEDIA 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here