கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மாகாணங்களுக்கிடையே பயணத்தடை விதிக்கப்படும். - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 6 May 2021

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மாகாணங்களுக்கிடையே பயணத்தடை விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மேலும் அதிகமாக இனங்காணப்படுவார்களானால்
மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் மிக அவதானமாக செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் எச்சரிக்கை சூழ்நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றுவரை நாடளாவிய 14 மாவட்டங்களில் 06 பொலீஸ் நிர்வாக பிரதேசங்களில் 98 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  நேற்றைய தினம் திருகோணமலை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலக நிர்வாக அதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு நேற்றையதினம் என்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ பிரதேச செயலாளரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க அவரோடு பணிபுரிந்த பிரதேச செயலக ஊழியர்கள் 48 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கு அதிகமான வைரஸ் தொற்று நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் நாட்டில் 1914 பேர் கொரோணா வைரஸ் தொற்று புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்று நோயாளர்கள் தினமும்புதிதாக இனங்காணப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த 54 பேருக்கும் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நேற்றும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பகா, மட்டக்களப்பு,வவுனியா,களுத்துறை, அம்பாறை, மொனராகலை, மாத்தளை, பொலநறுவை, திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களிலிலேயே கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here