தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் ஸ்டாலின்! பிரபலங்கள் வாழ்த்து - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 2 May 2021

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் ஸ்டாலின்! பிரபலங்கள் வாழ்த்து

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகி முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது வரையிலான முடிவுகளின் படி 130இற்கும்  மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி  தி.மு.க முன்னணி வகிக்கிறது.


பத்து வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள அபார வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.

இதன்படி தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களின் பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.கவின் ஆட்சி மலர்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதேவேளை, தி,மு.க சார்பில் போட்டியிட்ட ஸ்டாலினின் மகனும் பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை விட அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here