மன்னார் நகருக்குள் தேவையில்லாமல் வருவதையும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவதையும் மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தீவின அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Friday, 7 May 2021

மன்னார் நகருக்குள் தேவையில்லாமல் வருவதையும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவதையும் மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தீவின அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக 7 கொரோனா கொன்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் இது தொடர்பாக மன்னார் பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் இன்று(7) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் பொழுது

மன்னார் மாவட்டத்தில் இந்த மாதத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றது நேற்றைய தினம்(6) மாத்திரம் மன்னார் மாவட்டத்தில் 6 பேர் சமூகத்திலிருந்து கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்

இவர்களில் மூன்று பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களும் மூன்று பேர் மன்னார் நகர கடைகளில் பணியாற்றி வருபவர்களும் ஒருவர் ஆசிரியராக கொழும்புக்கு அண்மையில் சென்று வந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவர்களோடு சேர்த்து இந்த மாதம் முதல் ஆறு நாட்களில் 13 தொற்றாளர்களும்
இந்த மாதம் முழுவதும் 21 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்

அத்துடன் இந்த வருடம் 355 பேரும் மொத்தமாக 372 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்

இந்த மாதம் 591 பிசிஆர் பரிசோதனைகள் செய்திருக்கின்றோம் அதில் குறிப்பிட்ட அளவு முடிவுகள் வர இருக்கின்றது

இதுவரையில் மன்னாரில் மொத்தமாக 14530 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது

இந்த நேரத்தில் மக்களை நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புவது என்னவென்றால் இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதமாக கருதப்படுகின்றது எனவே மக்கள் எவருடைய கண்காணிப்பு களும் இல்லாமல் தாமாகவே சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்

அதனைவிட மன்னார் நகருக்குள் தேவை இல்லாமல் எவரும் வர வேண்டாம் அவ்வாறு வரும் பட்சத்தில் கூடுமான அளவு பொது போக்குவரத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது

மேலும் உணவகங்களில் அமர்ந்திருந்து உணவருந்துதல்
கூடி நின்று கதைத்தல் போன்ற செயற்பாடுகளை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம்

உணவக உரிமையாளர்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அளவு வாடிக்கையாளர்களை மட்டுமே உணவகங்களில் அனுமதிக்க வேண்டும்

அத்தோடு இந்த பிரச்சனை நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்களுக்கு தேவையான உணவுகளை வீட்டுக்கே கொண்டு கொண்டுசென்று வினியோகிப்பபது அதேபோல் ஏனைய நிறுவனங்களும் மக்களை அலுவலகங்களுக்கு வரவிடாமல் மக்களுடைய இடத்திற்கே சென்று அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பொறிமுறைகள உருவாக்குவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவர்கள் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here