நீடிக்கப்படுமா? இராணுவ தளபதி விளக்கம் - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 7 June 2021

நீடிக்கப்படுமா? இராணுவ தளபதி விளக்கம்

தற்போதுள்ள நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இந்த நேரம் வரை  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது  அவர் இதனைக் கூறியுள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்ற எந்த பரிந்துரையும் இன்று காலை நிலவரப்படி தமக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அல்லது செயலணிக்கும் அத்தகைய பரிந்துரை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் வழமையாக அத்தகைய நிலைமை இருந்தால், அது இந்தநேரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 14ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், மேலும் இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கை தேவைப்பட்டால், எதிர்காலத்தில் நிலைமையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால் அவ்வாறான நிலைமையொன்று தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here