கொவிட் 19 நோய் காரணமாக வீடுகளிலேயே மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கிறது. - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 27 May 2021

கொவிட் 19 நோய் காரணமாக வீடுகளிலேயே மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கிறது.

கடந்த 20ம் திகதி முதல் இதுவரையில் பதிவான 221 கொவிட் மரணங்களில், 54 மரணங்கள் வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளன.

அவர்களில் 22 பேரின் மரணங்கள் கடந்த இரு தினங்களில் பதிவாகியுள்ளன.

இதேவேளை மக்கள் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட்டால், அடுத்த சில வாரங்களுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொவிட் நோயாளர்களது எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியிலும் அதன் பின்னரும் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமையே இதற்கான காரணமாகும்.

இந்தநிலையில் மக்கள் சரியாக நடந்துக் கொண்டால் சில வாரங்களில் நோய் பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here