புறநிழல் சந்திர கிரகணம் தொடர்பாக (ACJU) - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 26 May 2021

புறநிழல் சந்திர கிரகணம் தொடர்பாக (ACJU)

(26.05.2021) புதன்கிழமை இன்ஷா அல்லாஹ் பூரண சந்திரக் கிரகணம் (வுழவயட டுரயெச நுஉடipளந) ஏற்படவுள்ளதாகவும் அது இலங்கைக்கு புறநிழல் சந்திர கிரகணமாகவே (Pநரெஅடிசயட டுரயெச நுஉடipளந) ஏற்படவுள்ளது எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இப்புறநிழல் சந்திர கிரகணம் கொழும்பு நேரப்படி 19:20 மணியுடன் முடிவுறுவதாகவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புறநிழல் கிரகணத்தின் போது சந்திரனின் வெளிச்சத்தில் மங்கலான ஒரு நிலையே ஏற்படும். சந்திரன் பூரணமாகவோ அல்லது அதில் ஒரு பகுதியோ மறைவதில்லை. சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதை காணும் போதுதான் கிரகணத் தொழுகை சுன்னத்தாகும். மாறாக, புறநிழல் கிரகணத்தின் போது கிரகண தொழுகை சுன்னத்தாகமாட்டாது.

'சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. ஆகவே அவை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)


அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் 
செயலாளர் - ஃபத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் 
பொது செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here