யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test) மொழிபெயர்ப்பில் கலைமாணி கற்கைநெறி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 19 May 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test) மொழிபெயர்ப்பில் கலைமாணி கற்கைநெறி (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

மேற்படி நான்கு வருட பட்டப் படிப்புக் கற்கைநெறிக்கு அனுமதி பெறவிரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 04.06.2021 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும்

மொழிபெயர்ப்பில் கலைமாணி கற்கைநெறியைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ஆகக் குறைந்தது 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பதுடன் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.

உளச்சார்புப்பரீட்சை

மேற்குறித்த கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலமொழித் திறமையைப் பரீட்சிப்பதற்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும். பரீட்சைகள் தமிழ், ஆங்கில மொழிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும்.

விபரங்களுக்கு

http://www.jfn.ac.lk/index.php/aptitude-test-translation-studies/

விண்ணப்பதாரிகள் கீழுள்ள இணைப்பினூடாக தத்தமது விண்ணப்பங்களை நிகழ்நிலையாக (Online) 04.06.2021 ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க

http://www.jfn.ac.lk/index.php/online-application-form/

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here