நான் குற்றம் செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை விதிக்கவும். - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 18 May 2021

நான் குற்றம் செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை விதிக்கவும்.

தான் ஏதேனும் தவறு செய்தால் தனக்கு மரண தண்டனை
விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், தான் கைது செய்யப்பட்டு 22 நாட்களுக்கு மேல் சென்றுள்ளபோதும் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்துள்ளமையானது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை எனவும் அவர் சபையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here