முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் (ஈதுல் பித்ர் நேரலை நிகழ்ச்சி) - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 13 May 2021

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் (ஈதுல் பித்ர் நேரலை நிகழ்ச்சி)

கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில், ஈதுல் பித்ர் தொழுகையை சகல முஸ்லிம்களும் தவறாது தொழுவதற்கு வழிகாட்டவும் கூட்டு உணர்வை உண்டாக்கவும் உலமாக்களால் நடாத்தப்படும் நேரலை நிகழ்ச்சி, பெருநாள் தினம் காலை 7.30 முதல் 8.15 வரை புத்தசாசன, மத, கலாச்சார விவகார அமைச்சின் ஆலோசனைக்கேற்ப, வக்பு சபையின் பணிப்புரையின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படுள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

7.30 - தக்பீர்

7.40 - பெருநாள் தொழுகை

7.50 - பெருநாள் குத்பா

*நேரலை : சக்தி TV* : காலை 7.30 - 8.15

*ஒளிபரப்பு : வசந்தம் TV (ITN)* : காலை 8.00- 8.45

*ஒலிபரப்பு: SLBC முஸ்லிம் சேவை* : காலை 8.30 - 9.15

காலை 7.30 மணிக்கு எல்லோரும் தத்தமது வீடுகளிலிருது பெருநாள் தக்பீரில் இணைந்து கொள்வோம்.

வீட்டில் ஜமாஅத் நடத்தக்கூடியவர் இருந்தால் 7.40 மணிக்கு ஜமாஅத்தாக தொழவும் . இல்லாவிடில் தனியாக தொழும் நிய்யத்தோடு தனியாக தொழுது கொள்ளவும்.

தொழுகையை முடித்து 7.50 மணிக்கு குத்பாவில் இணைந்து கொள்ளவும்.

*இவ்வாறு பெருநாள் தினத்தின் நன்மைகளை அடைந்து கொள்வோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here