புத்தளம் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 9 May 2021

புத்தளம் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

புத்தளம் நகர்ப்பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பல கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் புத்தளம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுமார் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புத்தளம் பொது சுகாதார பரிசோதகர் திரு.சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் புத்தளம் இரண்டாம் கட்டை வில்லுவ வத்தை மற்றும் வேப்பமடு பகுதியில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்ற பீ.சீ.ஆர் முடிவுகளின்படி, பொத்துவில்லு பகுதியில் இருவரும், பாலாவி பகுதியில் 6 பேரும் உள்ளடங்களாக 14 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் அவர்கள் அனைவரும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் புத்தளம் நகர்ப்பகுதியில் பொலிசார் விஷேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளதுடன், முகக்கவசம் அணியாத சுமார் 20 நபர்களை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here