கல்வியமைச்சில் ஆறு பிரிவுகளுக்குப் பூட்டு - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 10 May 2021

கல்வியமைச்சில் ஆறு பிரிவுகளுக்குப் பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், கல்வியமைச்சில் பாடசாலை நடவடிக்கைகள் பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இனங்காணப்பட்டமையால், இந்த ஆறு பிரிவுகளும் மூடப்பட்டுள்ளன என கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொரோனா ​அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட பிரதேசங்களில், கல்வியமைச்சில் கடமையாற்றும் பணியாளர்கள் பலர் உள்ளனர். இதனால், கல்வியமைச்சின் செயற்பாடுகள் பல, முடங்கியுள்ளன என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கல்வியமைச்சின் செயற்பாடுகளை, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஆகக்கூடுதலாக செயற்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் ​ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அந்த அதிகாரி, மூடகப்பட்ட பிரிவுகளின் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here