சாரதி அனுமதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகு காலம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 10 May 2021

சாரதி அனுமதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகு காலம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் வரையான காலப்பகுதிக்கு காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இக்காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை அவை காலாவதியான திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹேர காரியாலங்களின் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில், குறித்த காரியாலங்களில் தொலைப்பேசியின் ஊடாக முன்கூட்டிய நேரத்தை ஒதுக்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மூடப்பட்டுள்ள காரியாலங்களை மீள திறப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என மோட்டார வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே அலஹகோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here