எதிர்வரும் புதன் கிழமை ஷவ்வால் மாத பிறை பார்க்குமாறு வேண்டுகோள்! - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 10 May 2021

எதிர்வரும் புதன் கிழமை ஷவ்வால் மாத பிறை பார்க்குமாறு வேண்டுகோள்!

இம்முறை புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்பிறை பார்க்கும் நாள் எதிர்­வரும் 12 ஆம் திகதி (ரம­ழான் பிறை 29) புதன் கிழமை மாலையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்­வரும் புதன் கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உல­மாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்­தியோகத்தர், மேமன் ஹனபி பள்ளிவாசல் முக்கியஸ்தர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, புனித ஷவ்வால் மாதத்திறகான தலைப்பிறை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, அன்றைய தினம் மாலை பிறை பார்க்குமாறு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அத்துடன், பிறை தென்பட்டமை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும், தலைப்பிறை சமபந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ வதந்திகளையோ பகிர்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புகளுக்கு : 0112432110, 0112451245, 0777316415 –

Vidivelli

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here