இன்று நள்ளிரவு முதல் மாகணங்களுக்கு இடையே பயணிப்பது தடை - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 11 May 2021

இன்று நள்ளிரவு முதல் மாகணங்களுக்கு இடையே பயணிப்பது தடை

இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இது தடையாக இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த கட்டுப்பாடுகளின் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பராமரித்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here