கொரோனா- கவிதை (பெரியமடு நிஹ்ரி) - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 3 May 2021

கொரோனா- கவிதை (பெரியமடு நிஹ்ரி)

போய் விட்டாய் என்று
பொதுவான நிலைமாற-மீண்டும்
பேய் ஆட்டம் ஆடுகிறாய் நின்று-நீ
போவது எங்களை விட்டு என்று

ஏனோ தெரியவில்லை

நல்ல நாள்
பெருநாள் என்றால்
எங்கிருந்து வருகிறாயோ புரியவில்லை

காற்றில் பரவி
தீயில் முடிக்கிறாய்
ஈற்றில் உனது நோக்கம் என்னவோ
இன்னும் இருப்பது இங்கு
என்னதான் பண்ணவோ

உயிர் வாயு இல்லாது
உயிர் படும் வேதனை
கண்களால் காண முடியாத கொடுமை

நத்தைக் கூட்டில் வாழவா
போர் விழுந்த மரத்துக்குள் புகுந்திடவா
குகையின் இருளுக்குள் குடிபுகவா
குழம்பி இருக்கிறது மனது

பரிகாரம் இல்லாத உனக்குப்
பயந்துதான் என்ன செய்ய

நடப்பது நடக்கட்டும் என்று
நாம்வாழ நினைத்தாலும்
பக்கத்தில் உள்ளவன்
பயங்காட்டியே
வராத உன்னை வம்புக்கு இழுக்கிறான்

ஆன்மீகத்தில் மட்டும் உனக்கு
அக்கறை அதிகமாகவே இருக்கிறது
அங்கே ஒன்று சேர உன்மனம் தடுக்கிறது


கடவுளைத் தரிசிப்பவர்களைக்
கண்டால் உனக்கு
கருணை பிறக்கிறதோ

பக்தர்கள் மீது காட்டும்
கவனத்தை
பயணிகள் மீதும் காட்டு

நாடே தீக்குளிக்கிறது-உன்
நாடகத்தைக் கொஞ்சம் நிறுத்து

என்ன சாதிக்க வேண்டுமென்ற
எண்ணத்தில் வருகிறாய்

விட்டுவிடு உயிர்கள் இங்கு பாவம்-நீ
விரட்டி விட்டால் எங்கு அது போகும்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here