பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
209 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வி இன்றி முடிவடைந்தது. அதற்கமைய, 1 - 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணி 493 - 7 , 194 - 9
பங்களாதேஷ் அணி 251 , 227
பந்து வீச்சில் தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் ப்ரவீன் ஜயவிக்ரம முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று நிறைவடைந்த இரண்டாம் இனிங்ஸில் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்த இன்னிங்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 5 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தி உள்ளார்.
இதனை அடுத்து இலங்கையில் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக ப்ரவீன் ஜயவிக்ரம பெயரை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கையராக அகிலதன்ஜசய
8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment