இந்த வருட உயர் தர பெறுபேறுகள் முதலாவது இடம் பிடித்தவர் இரண்டாவது இடம்பிடித்தவர் என்பதாக தரப்படுத்துவதில்லை - பரீ்சை ஆணையாளர் நாயகம். - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 6 May 2021

இந்த வருட உயர் தர பெறுபேறுகள் முதலாவது இடம் பிடித்தவர் இரண்டாவது இடம்பிடித்தவர் என்பதாக தரப்படுத்துவதில்லை - பரீ்சை ஆணையாளர் நாயகம்.

2020 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்கான பெறுபேறுகள்  வௌியிடப்பட்டுள்ளதாகவும். குறித்த பெறுபேறுகளை ஒன்லைன் ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட பரீட்சார்ததிகளுக்கும் தங்களது பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் B. சனத் பூஜித தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த வருடம் இலங்கையில் திறமையான மாணவர்களின் விபரங்களை வௌியிடுகின்ற முறையானது நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்.  இந்தப் பரீட்சையானது திறமைகளை மதிப்பீடு செய்து அகில இலங்கை ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்வதற்காகவே நடாத்தப்படுவதுடன் முதலாம் இரண்டாம் இடங்களுக்கானவர்களை தெரிவுசெய்வதற்காக நடாத்தப்படுவதில்லை. அத்துடன் இன்று காணப்படுகின்ற போட்டித் தன்மையின் விளைவாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களும் தெரிவாகாரத மாணவர்களும் பரிய அளிவிலான மனஅழுத்தங்களுக்கு உள்ளாவதானல் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

பரீட்சைப் பெறுபேறுகள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிப்பதற்கான வசதிகள் பாடசாலைகள் ஆரம்பமானதன் பின்னர் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அமைத்துத்தரப்படும் என்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here