AL பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளி பெறவில்லையா? நீங்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தவற வேண்டாம். - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 6 May 2021

AL பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளி பெறவில்லையா? நீங்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தவற வேண்டாம்.

AL பரீட்சையில் 3 பிரதான பாடங்களிலும் உயர் சித்தி பெற்று 'பொது சாதாரண பரீட்சையில்' (CGT) குறைந்தது 30 புள்ளிகள் பெறா விட்டாலும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.

வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதும் தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழகம் குறித்து 'பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்' (UGC) அறிவிக்கப்படும்.

எனினும் பல்கலைக்கழக அனுமதிக்குப் பதிவு செய்து கொள்ள முடியாது. அதன் பின்னர் வரும் AL பரீட்சையில் பொது சாதாரண பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகளைப் பெற்றதும் அதுகுறித்து உடனடியாக ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதன் மூலம் விரைவாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

3 தடவையிலான AL பரீட்சையொன்றில் பொது சாதாரண பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகள் பெற்றால் போதுமானது. 2019 இல் இவ்விதம் கற்கை நெறிக்குத் தெரிவு செய்யப்பட்டுக் காத்திருப்போர் இப்போதைய 2020 பரீட்சைப் பெறுபேற்றின்படி 30 புள்ளிகளேனும் பெற்றுக் கொண்டிருந்தால் இப்போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.

மாறாக AL பரீட்சையின் 3 பிரதான பாடங்களுடன் பொது சாதாரண பரீட்சைப் புள்ளியும் ஒரே பெறுபேறாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இந்த விடயம் ஆணைக்குழு விண்ணப்பம் கோரும் சகல கற்கை நெறிகளுக்கும் பொருந்தும்.

- முகுசீன் றயீசுத்தீன் MEd.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here