கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் தற்காலிக நிலையமாக மதுரங்குளி மேர்சி பாடசாலை அறிவிக்கப்பட்டுள்ளது. - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 1 May 2021

கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் தற்காலிக நிலையமாக மதுரங்குளி மேர்சி பாடசாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புத்தளம் தல வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் Dr. K. அஸ்பர் தெரிவித்தார்.

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையங்களில் போதிய இட வசதியின்மையால், குறித்த மதுரங்குலி மேர்சி பாடசாலையை தற்காலிக சிகிச்சை மையமாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகள் சுமார் 400 பேருக்கு தேவையான கட்டில்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் குறித்த பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் கொரோனா நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக இங்கு கொண்டுவரப்ப உள்ளதாகவும் Dr. K. அஸ்பர் அவர்கள் eNews1st ற்கு தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் தங்கியிருந்த அதிகலவான மாணவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக இயங்கும் அதேவேளை கற்றல் நடவடிக்கைகளிலும் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here