ஷவ்வால் மாத ஆறு நோன்புகள் தொடர்பான வழிகாட்டல் (ACJU) - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 15 May 2021

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள் தொடர்பான வழிகாட்டல் (ACJU)

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ் தனது அடியார்கள் மீது பர்ளான வணக்கங்களுடன் உபரியான வணக்கங்களையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். ஏனெனில், உபரியான வணக்கங்களைப் பொருத்தவரையில் அது பர்ளான வணக்கங்களில் அடியார்களிடம் ஏற்படும் குறைகளை ஈடுசெய்யக்கூடியதாக உள்ளது. அத்துடன் ஒரு அடியான் அல்லாஹு தஆலாவை உபரியான வணக்கங்களின் மூலமாக நெருங்கும் போது அவனை அல்லாஹு தஆலா விரும்புகின்றான்.


அதன் அடிப்படையில் ரமழான் மாதத்திற்கு அடுத்துவரக்கூடிய ஷவ்வால் மாத்தின் ஆறு நோன்புகளை நோற்பதை மார்க்கம் எமக்கு சுன்னத்தாக ஆக்கியுள்ளது. அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டிள்ளதோடு அதன் சிறப்புகளையும் எடுத்துக்கூறியுள்ளார்கள்.


عن أبي أيُّوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: مَن صام رمضان ثم أتبَعَه ستًّا من شوَّال، كان كصيام الدهر. (صحيح مسلم: 1164)


ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளையும் நோற்றவர் காலமெல்லாம் நோன்பு நேற்றவரைப் போன்றவராவார் என நபி ஸல்;லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 1164)


இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், (ஷவ்வால் மாதத்தின்) ஆறு நோன்புகளையும் ஷவ்வால் மாத்தின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நோற்பது முஸ்தஹப்பாகும். எனினும், ஒருவர் அதனை அந்த மாதத்திற்குள் விட்டு விட்டு நோற்பதும், ஷவ்வால் மாதத்தின் ஆரம்பப் பகுதியை விட்டும் பிற்படுத்தி அம்மாதத்திற்குள் நோற்பதும் கூடும் என இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


ஷவ்வால் மாதத்தின் சுன்னத்தான ஆறு நோன்புகளையும் ஒருவர் ஆரம்பப்பகுதியில் தொடராக நோற்றுக் கொள்வதே சிறந்ததாகும். ஆகவே, முடியுமானவர்கள் அதனை அவ்வாறு நோற்றுக் கொள்ளுமாறும் அல்லது ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்கேற்ப அதனை ஷவ்வால் மாதத்திற்குள்ளே நோற்றுக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அல்லாஹு தஆலா நம்அனைவருக்கும் ஆறு நோன்புகளை நோற்பதற்குரிய தேக ஆரோக்கியத்தைத் தந்தருள்வானாக.

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here