வெளி நோயாளர் பிரிவு (OPD) இற்கு வந்த 80% நோயாளர்களுக்கு கொரோனா - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 15 May 2021

வெளி நோயாளர் பிரிவு (OPD) இற்கு வந்த 80% நோயாளர்களுக்கு கொரோனா

நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் நேற்று (14) சளி மற்றுக் தடுமல் அறிகுறிகளுடன் வெளி நோயாளர் பிரிவு (OPD) இற்கு வருகை தந்த 80% ஆனோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

இவ்வாறான நிலைமை மிகவும் ஆபத்தானவை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

இந்த நிலைமை காரணமாக, அடுத்த இரு வாரங்களில் கம்பஹா மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த ஆபத்தான சூழ்நிலை காரணமாக, கம்பாஹா மாவட்டத்தில் மருத்துவமனை அமைப்பு சரியான நிலையில் இல்லை எனவும், அந்த சூழ்நிலையைத் தவிர்க்க உடனடியாக திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கம்பஹா மாவட்டத்தில் குறைந்த ஆபத்துள்ள கொரோனா தொற்றாளர்களை தமது வீட்டிலேயே மருத்துவ மேற்பார்வையில் வைத்திருப்பது நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆபத்தான நிலைமை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் குறைந்தளவான அறிகுறிகளை கொண்ட நோயாளிகள் எதிர்வரும் 17 முதல் தங்களது வீடுகளில் இருந்தே கண்காணிக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here